இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு இன்றும் மவுசு அதிகமாகவே உள்ளது. இதுபோன்ற அரிதான மற்றும் புழக்கத்தில் இல்லாத தனித்துவமான பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதனைக் கொடுத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அந்த வகையில், தற்போது மயில் படம் கொண்ட 10 ரூபாய் நோட்டுக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளது. இந்த மயில் படம் கொண்ட 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், அது லட்சக்கணக்கான வருமானத்தை ஈட்ட உங்களுக்கு உதவலாம். இந்த நோட்டின் சிறப்பு மற்றும் அதை ஆன்லைனில் எவ்வாறு விற்பனை செய்யலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
அரிதான ரூ.10 நோட்டு
ஒவ்வொரு நாடும், தங்களது நாணய முறையை காலத்திற்கு ஏற்பப் புதுப்பித்து வருகின்றன. இந்தியாவிலும் சில பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், அவை தற்போது புழக்கத்தில் இல்லாவிட்டாலும், வரலாற்றுப் பெருமையாலும், அதன் அரிதான தன்மையாலும் அதிக மதிப்பைப் பெறுகின்றன.
உண்மையில், இத்தகைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பதன் மூலம், ஒருவர் பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் பலருக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. எனவே, இதுபோன்ற அரிதான நோட்டுகள் அல்லது நாணயங்கள் உங்களிடமும் இருந்தால் அதை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பழைய ரூபாய் நோட்டுகளுக்கான தேவை
சர்வதேச அளவில் பல இணையதளங்கள் மற்றும் நிறுவனங்கள், இத்தகைய அரிய நாணயம் மற்றும் நோட்டுகளுக்காக லட்சக்கணக்கான தொகைகளைக் கொடுக்கத் தயாராக உள்ளன. அந்த வகையில், தற்போது அதிக கவனத்தைப் பெறும் 10 ரூபாய் நோட்டு பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்.
மயில் பதிப்புடன் கூடிய ரூ.10 நோட்டு… அதன் சிறப்பு என்ன?
இந்த 10 ரூபாய் நோட்டின் பிரத்யேக அம்சம், நோட்டின் பின்புறம் இடம்பெற்றிருக்கும் மயில் படம்தான். இந்த நோட்டு தற்போது புழக்கத்தில் இல்லை. இதுவே, அதனை மிகவும் அரிதானதாக மாற்றியுள்ளது. எனவே, இதுபோன்ற ரூபாய் நோட்டுகளுக்கு சந்தையில் அதிக விலை கொடுக்க வாய்ப்புள்ளது.
உங்களிடம் இந்த நோட்டு இருந்தால் என்ன செய்வது?
மயில் படம் உள்ள ரூ.10 நோட்டு உங்களிடம் இருந்தால், அதன் மூலம் நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். மேலும், அந்த நோட்டின் சீரியல் எண் “786” ஆக இருந்தால், அதன் மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது பல சமுதாயங்களில் புனித எண்ணாகக் கருதப்படுவதால் அதிக தேவை உள்ளது.
அதே நேரத்தில், 111111, 000001, 123321 போன்ற ஃபேன்சி எண்கள் கொண்ட நோட்டுகளும், சந்தையில் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இத்தகைய ரூபாய் நோட்டுகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.1,00,000 வரையில் பணம் சம்பாதிக்கின்றன.
இந்த அரிய ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் விற்பது எப்படி?
இந்த அரிய ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால், அவற்றை ஆன்லைனில் eBay, Quikr, Coinbazaar போன்ற தளங்களில் எளிதாக விற்பனை செய்யலாம். அதற்குப் பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்.
படி 1: விற்பனையாளர் கணக்கை உருவாக்கவும்.
படி 2: நோட்டின் தெளிவான படத்தை எடுத்துப் பதிவேற்றவும்.
படி 3: நோட்டின் தன்மைகள், சீரியல் எண், மதிப்பீடு போன்ற விவரங்களை நிரப்பவும்.
படி 4: உங்கள் பட்டியலைக் குறிப்பிட்ட அந்த தளத்தில் வெளியிடவும்.
படி 5: ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள், அவர்களுடன் பேசி சிறந்த விலையை உறுதி செய்யலாம்.
பாதுகாப்பு முக்கியம்!
மேற்கண்ட முறைகளை மேற்கொள்ளும்போது, எப்போதும் கவனமாக இருப்பது முக்கியம் மற்றும் பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதும் அவசியம். எனவே, நம்பிக்கை இல்லாத நபர்களுடன் உங்களது தனிப்பட்ட தகவல்கள் அல்லது நிதி சம்பந்தப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. இது ஒரு ஒழுங்குபடுத்தப்படாத சந்தையாக இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த நோட்டின் சிறப்பு என்ன?
பழைய ரூபாய் நோட்டுகள் பழைய கால கட்டத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் காட்டுகின்றன. அவை புழக்கத்தில் இல்லாததால், சந்தையில் கிடைப்பதும் அரிதாகிவிடுகின்றன. நாணய சேகரிப்பு என்பது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலரும் ஆர்வத்துடன் மேற்கொள்ளும் ஒரு நடைமுறையாகும். இதில், “786” போன்ற மதிப்புள்ள எண்கள் கொண்ட நோட்டுகள் அதிக கவனத்தைப் பெறுகின்றன.
கவனிக்க வேண்டியவை:
இந்தக் கட்டுரை, பல இணையதளங்களிலிருந்து பெறப்பட்ட பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோட்டுகளின் விற்பனை சட்டபூர்வமானதாக இல்லாமல், தனியாராக நடக்கும் சந்தையாக இருப்பதால், மோசடி நடக்க வாய்ப்பு உண்டு. எனவே, நம்பகமான தளங்களையே பயன்படுத்துங்கள். எந்தவொரு நிதி இழப்புக்கும் நியூஸ்18 பொறுப்பாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
June 10, 2025 6:18 PM IST

