தினம் தினம் சேமிப்பு கணக்கை பயன்படுத்தி வந்தாலும் பலருக்கு இது மாதிரியான அன்றாட பண பரிமாற்றங்கள் கூட வருமானவரித் துறையின் ஆய்வுக்கு வழிவகுக்கலாம் என்பது தெரிவது கிடையாது. எனவே எந்த மாதிரியான சூழ்நிலைகளில் சேமிப்பு கணக்குகளை பயன்படுத்தி செய்யும் பண பரிமாற்றங்களுக்கு வருமானவரித்துறை சோதனை நடைபெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் உங்களுடைய அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் 10 லட்சத்திற்கு மேல் கேஷ் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் உங்களுடைய வங்கியானது அது குறித்து வருமானவரித்துறைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பும். இதற்காக இந்த பணம் சட்டத்திற்கு புறம்பானது என்று அர்த்தம் கிடையாது. மாறாக அந்த பணத்திற்கான மூலம் என்ன என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
பணமாக 1 லட்ச ரூபாய் அல்லது மொத்தமாக 10 லட்ச ரூபாய் (ஆன்லைன் மற்றும் செக் பேமெண்ட்கள் உட்பட) போன்ற கிரெடிட் கார்டு பேமெண்ட்களுக்கு வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குனர்கள் வருமானவரித்துறையினரிடம் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். நீங்கள் தெரிவித்துள்ள வருமானத்தோடு ஒப்பிடும்போது உங்களுடைய செலவு செய்யும் பழக்கத்தை வருமானவரித்துறை இந்த தரவை பயன்படுத்தி ஒப்பிட்டு பார்க்கும்.
வழக்கத்திற்கு மாறாக நீங்கள் பெரிய அளவிலான ஒரு தொகையை வித்ட்ரா செய்தாலோ அல்லது அடிக்கடி வித்ட்ரா செய்யும் போது அதிலும் குறிப்பாக அது உங்களுடைய வருமானத்தோடு ஒத்துப் போகாத பட்சத்தில் இது வருமான வரித்துறை சோதனையை வரவழைக்கலாம்.
30 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான மதிப்பு கொண்ட அசையா சொத்தை நீங்கள் வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சம்பந்தமான பண பரிமாற்றம் அல்லது ஆவண வரி மதிப்பு அடிப்படையில் சார்பதிவாளர் மூலமாக வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
நீங்கள் பயன்படுத்தாமல் இருந்த ஒரு அக்கவுண்டில் திடீரென்று பெரிய அளவிலான டெபாசிட் அல்லது வித்ட்ராயல்கள் நடைபெற்றால் வங்கிகள் அதனை அசாதாரணமான ஒரு செயல்பாடாக கருதும். எனவே அது குறித்த விளக்கத்தை நீங்கள் வழங்க வேண்டி இருக்கலாம்.
ஒரு நிதியாண்டில் 10 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான தொகையை ஃபோரெக்ஸ் கார்டு அல்லது இன்டர்நேஷனல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி நீங்கள் செய்யும் போது அதிகாரப்பூர்வ டீலர்கள் மற்றும் மணி எக்சேஞ்சர்கள் அது குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.
NBFCகள், தபால் நிலையங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவை தொகையை கருத்தில் கொள்ளாமல் அனைத்து வட்டி, பங்கு வீதம் மற்றும் முதலீடு மூலமாக கிடைக்கும் லாபங்களை அறிக்கையிடவேண்டும். உங்களுடைய சேமிப்பு கணக்கு மூலமாக கிடைக்கும் வட்டி 10,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் கூட அது குறித்த தகவல் ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மெண்டில் (AIS) காண்பிக்கப்படும். AIS மற்றும் ITRல் உள்ள தகவல்கள் ஒத்துப்போகாத பட்சத்தில் அதன் காரணமாக வெரிஃபிகேஷன் நடைபெறலாம்.
பல சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பதால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் உங்களுடைய ITR தாக்கல் செய்யும்போது அந்த அனைத்து அக்கவுண்டுகள் மூலமாக நீங்கள் பெறும் மொத்த வட்டி தொகையையும் சேர்க்க வேண்டும். அதில் சிறிய அளவிலான ஒரு தொகையை நீங்கள் தவறவிட்டால் கூட அது ஆட்டோமேட்டிக்காக சிஸ்டத்தில் காண்பிக்கப்படும்.
உதாரணமாக பண்டிகை சமயங்களில் Amazon அல்லது Flipkart போன்ற இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்கள் மூலமாக ஸ்பெஷல் டிஸ்கவுண்டுகளில் நீங்கள் உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி பேமெண்ட்களை செய்திருக்கலாம். ஒருவேளை உங்கள் கார்டை உங்களுடைய நண்பருக்கு நீங்கள் கடனாக கூட கொடுத்திருக்கலாம். அந்த பேமெண்டை நீங்கள் கேஷாக உங்களுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்தாலோ அல்லது அந்த கிரெடிட் கார்டு பேமெண்ட் வரம்பை விட அதிகமாக இருந்தாலோ அது குறித்து ஆட்டோமேட்டிக் ரிப்போர்ட்டிங் மெக்கானிசம் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை அதிக மதிப்பு கொண்ட பொருளாதார பரிமாற்றமாக வருமானவரித்துறை கருதும்.
October 23, 2025 7:25 PM IST

