Last Updated:
எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஏப்ரல் 7- ஆம் தேதி முதல் விமான பயணிகளிடம் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலித்து வந்தன.
வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளிடம் வசூலித்து வந்த எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா திரும்பப் பெற்றது.
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமாக மேற்கு ஆசியாவில் நிலவிய பதற்றம், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உருவான சர்வதேச அளவிலான எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஏப்ரல் 7- ஆம் தேதி முதல் விமான பயணிகளிடம் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலித்து வந்தன.
இந்நிலையில், ஈரான் அமெரிக்கா மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டதால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கி சகஜ நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.
இதையடுத்து, வட அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், ஆஸ்திரேலியா செல்லும் விமான பயணிகளிடம் வசூலித்து வந்த எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றது.
முன்னதாக வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகளிடம் டிக்கெட் தொகையுடன் சேர்த்து கூடுதலாக 24 அமெரிக்க டாலரை ஏர் இந்தியா வசூலித்து வந்தது.


