Last Updated:
கிழக்கு ஆப்பிரிக்காவை மேற்கு ஆசியாவில் இருந்து பிரிக்கும் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகியவை இந்த மாற்றத்தின் காரணமாக உருவாகியுள்ளன.
உலகில் மிகப்பெரிய கண்டங்களில் ஒன்று இரண்டாக பிரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசியா உள்ளிட்ட கண்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் நில அமைப்புகள் பல்வேறு புவியியல் மாற்றங்களால் பிரிந்து கண்டங்களாக உருவெடுத்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நில அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மூலமாக புதிய நிலப்பரப்புகள் உருவாகின்றன.
இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு சில மில்லியன் ஆண்டுகள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு தனி நிலங்களாக பிரியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன்படி எதிர்காலத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தின் நிலை அமைப்பு முற்றிலும் மாறுபட்டு இரண்டாகப் பிரிந்து நிற்கும் என்று கூறப்படுகிறது
இந்த கண்டம் பிரிவதன் காரணமாக புதிய நீர் நிலை ஏற்படும் என்றும், சில ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இதன் மூலம் கடற்கரை ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 2005 ஆம் ஆண்டு எத்தியோப்பியா பாலைவனத்தில் 35 மைல் நீளத்திற்கு மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. இது ஆப்பிரிக்கா பிளவு முறையும் முதல் அறிகுறியாகவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த நிலப்பரப்பு மாற்றத்தை டெக்டானிக் செயல்பாடு என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர். கிழக்கு ஆப்பிரிக்காவை மேற்கு ஆசியாவில் இருந்து பிரிக்கும் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகியவை இந்த மாற்றத்தின் காரணமாக உருவாகியுள்ளன.
இந்த மாற்றம் முழுமை அடையும் போது சோமாலியா, கென்யா, தான்சானியா போன்ற பிரதேசங்கள் ஆப்பிரிக்காவில் இருந்து துண்டிக்கப்படும் என்றும், ஒரு பெரிய புதிய பெருங்கடல் உருவாகும் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்த நிலத்தோற்ற மாறுபாடுகளால் ஆசிய நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
April 17, 2025 7:26 PM IST


