Last Updated:
செனூரன் முத்துசாமி 109 ரன்களும், பவுலர் மார்க்கோ ஜான்சன் 93 ரன்களும் எடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டி அசாமின் கவுகாத்தி நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 489 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இந்த மேட்ச் டிராவில் முடிந்தாலும் கூட தென்னாப்பிரிக்கா அணி தொடரை வென்று விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரையில், பௌலராக கருதப்படும் செனூரன் முத்துசாமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இவரை வெளியேற்றுவதற்கு இந்திய பவுலர்கள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்த விஷயத்தில் கேப்டன் ரிஷப் பந்த் அணியின் முக்கிய பவுலர்களில் ஒருவராக கருதப்படும் நிதீஷ் குமார் ரெட்டியை பயன்படுத்த மறந்து விட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள பிரபல வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக், “நிதிஷ்குமார் ரெட்டி என்ற பவுலர் அணியில் இருப்பதையே ரிஷப் பந்த் மறந்துவிட்டார். தொடக்கத்தில் அவர் சிறிது ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், அதை பின்னர் சிறப்பான பந்துவீச்சாக வகைப்படுத்தினார்” என்று கூறினார்.
November 23, 2025 8:31 PM IST


