இந்தியாவிலிருந்து வெளியேறி ஒரு முன்னணி நாட்டில் குடியேறுவதற்கு இந்திய கோடீஸ்வரர்கள் சுமார் 4000-க்கும் அதிகமானோர் ஆர்வம் காட்டுவதாக ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச முதலீடு, இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமாக ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் குடியேறுவது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தியுள்ளது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 4,300 இந்திய கோடீஸ்வரர்கள் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் குடியேறலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 5,100 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஹென்லி பார்ட்னர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. வெளியேறும் கோடீஸ்வரர்களில் பலர் இந்தியாவில் வணிக நலன்கள் மற்றும் இரண்டாவது வீடுகளைத் தக்கவைத்துக்கொள்வதை அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
இந்திய தனியார் வங்கிகள் மற்றும் செல்வ மேலாண்மை தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற முதலீட்டு ஆலோசனை சேவைகளை வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தீவிரமாக விரிவடைந்து வருகின்றன. நுவாமா பிரைவேட் மற்றும் எல்ஜிடி வெல்த் மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களது சேவையை விரிவு படுத்தியுள்ளன.
“Kotak Mahindra Bank மற்றும் 360 ONE Wealth ஆகியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு செல்வ மேலாண்மை சேவைகளை வழங்குவதற்காக இணைந்துள்ளன.
இதையும் படிங்க – உலகின் வலிமையான ஹோட்டல் பிராண்ட் பட்டத்தை மீண்டும் பெற்றது தாஜ்!
2024 ஆம் ஆண்டில் உலகளவில் 1,28,000 கோடீஸ்வர்கள் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. UAE மற்றும் USA ஆகியவை இடம்பெயர கோடீஸ்வரர்களுக்கு விருப்பமான இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. புலம்பெயர்ந்த கோடீஸ்வரர்கள் கணிசமான சொத்துக்களை அவர்களுடன் கொண்டுசெல்வதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள்.
பாதுகாப்பு, நிதி பராமரிப்பு, வரிச் சலுகைகள், ஓய்வூதிய வாய்ப்புகள், வணிக வாய்ப்புகள், சாதகமான வாழ்க்கை முறைகள், குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள், சுகாதார அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கோடீஸ்வர குடும்பத்தினர் இடம்பெயர விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
