தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா, வெள்ளி வாங்கலாமா என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவின் மூலமாக நிச்சயமாக அதற்கான பதிலைப் பெறுவீர்கள். வழக்கமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே முதலீடு செய்வதற்கான சிறந்த உலோகங்களாக கருதப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தை கணிக்க முடியாத சமயத்தில் கூட இந்த இரண்டு உலோகங்களும் நமக்கு நம்பிக்கை தரும் வகையில் நல்ல ரிட்டன்களை தரக்கூடியவை. கடந்த சில காலமாக தங்கம் மற்றும் வெள்ளி எந்த அளவுக்கு ரிட்டன்களை தருகின்றது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கடந்த 5 வருடங்களில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே சிறந்த ரிட்டன்களை வழங்கி உள்ளன. தங்கத்தை பொறுத்தவரை எதிர்காலத்தில் இது 106.13 சதவீத ரிட்டனை தரும் என்று கணிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி தங்கத்தை விட அதிகமாக 116.63 சதவீதம் ரிட்டனை தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக தங்கம் எப்பொழுதுமே நல்ல ரிட்டன்களை தரக்கூடிய ஒரு உலோகம். எனினும், சமீபத்தில் வெள்ளி தங்கத்தை விட அதிக வலிமையான உலோகமாக மாறிவிட்டது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வெள்ளி மூலமாக 36.35% ரிட்டன் கிடைத்துள்ளது. இதுவே தங்கத்தின் ஒரு வருட ரிட்டன் 29.49 சதவீதம். வெள்ளியின் விலை தொழிற்சாலைகளில் உள்ள டிமாண்ட், உலக அளவில் நடைபெற்று வரும் அரசியல் பதற்றங்கள் காரணமாக மாறுபடலாம். இதுவே தங்கத்தின் விலை வெள்ளியை விட அதிக நிலையானதாக இருக்கும். இந்த மாற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்களுக்கு வெள்ளி ஒரு சிறந்த ஆப்ஷனாக கருதப்படுகிறது.
தங்கமானது ஒரு பாதுகாப்பான சொத்தாக கருதப்படுகிறது. இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை தற்போது 79,583 ரூபாய். தங்கத்தை உடனடியாக பணமாக மாற்றிக் கொள்வதன் காரணத்தால் பல முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். மேலும் அது மட்டுமல்லாமல் தன்தேராஸ், தீபாவளி, அக்ஷய திருதியை போன்ற நன்னாள்களில் தங்கம் ஒரு அற்புதமான சாய்ஸாக கருதப்படுகிறது.
இதையும் படிக்க:
Gold rate today: மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளியானது 10 கிராமுக்கு 1,025 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ், ரின்யூவல் எனர்ஜி மற்றும் மருத்துவம் போன்ற தொழில் துறைகளில் வெள்ளி டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அதன் விலை தற்போது அதிகமாகி வருகிறது. சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் பிற பசுமை தொழில்நுட்பங்களிலும் வெள்ளி பயன்படுத்தப்படுவதால் இது கிளீன் எனர்ஜிக்கான மாற்றத்தில் ஒரு முக்கியமான மூலமாக கருதப்படுகிறது. இதுவே வெள்ளியின் விலை இவ்வளவு அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணமாகவும் அமைகிறது. கிட்டத்தட்ட இரண்டு உலோகங்களுமே நல்ல சொத்துக்களாக கருதப்படுகின்றன. எனவே ரீடைல் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டுமா?
இதையும் படிக்க:
இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள்.. முதலிடத்தில் எந்த மாநிலம் இருக்கு தெரியுமா?
ரீடைல் முதலீட்டாளர்களை பொறுத்தவரை தங்கம் மற்றும் வெள்ளி இடையே எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவு தனி நபர் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அபாயத்தைப் பொறுத்தும் மற்றும் முதலீட்டு இலக்குகளை பொறுத்தும் அமையும். தங்கத்தை உடனடியாக பணமாக மாற்றிக் கொள்ளலாம். தங்கத்தை வாங்குவதும் விற்பனை செய்வதும் மிகவும் எளிது. மறுபுறம் வெள்ளி தொழில் சார்ந்த பயன்பாடுகளில் தற்போது அதிகம் காணப்படுகிறது. நீண்ட கால முதலீடுகளை செய்ய நினைப்பவர்களுக்கு வெள்ளி ஒரு சிறந்த முதலீட்டு ஆப்ஷனாக இருக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
