• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்த தீபாவளிக்கு இது தான் புது ட்ரெண்ட்… ஸ்வீட் போன்ற மெழுகுவர்த்தியில் தீபம்…

GenevaTimes by GenevaTimes
November 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்த தீபாவளிக்கு இது தான் புது ட்ரெண்ட்… ஸ்வீட் போன்ற மெழுகுவர்த்தியில் தீபம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. ஒருபுறம் புத்தாடை, பட்டாசுக்கான ஷாப்பிங் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்க, மறுபுறம் பலகார வகைகளுக்கான பர்சேஸ் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும். தீபத் திருநாளில் வீட்டில் தீபமேற்றி வழிபாடுகள் நடைபெறும்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் விதவிதமான பட்டாசுகள், துணிமணிகள் வருகிறதே தீபாவளிக்கு வேறு ஏதேனும் புது ட்ரெண்ட் கிடையாதா என நீங்கள் யோசித்தது யாருக்குக் கேட்டதோ இல்லையோ கிருத்திகாவிற்கு கேட்டு விட்டது. அறைகளில் நறுமணம் பரப்பும் மெழுகுவத்தி வகைகள் செய்த இவர் தற்போது தீபாவளி ட்ரெண்டுக்கு ஏற்ற வகையில் விதவிதமான மெழுகுவர்த்திகளைச் செய்து வருகிறார். இதனால் இந்த தீபாவளிக்கு வீட்டில் ஏற்றும் தீபம் கூட புது ட்ரெண்ட் தான். அப்படி கிருத்திகா மெழுகுவர்த்தியில் என்ன மாயாஜாலம் செய்கிறார் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.

விளம்பரம்

தூத்துக்குடியில் பாலகிருஷ்ணா தியேட்டர் பக்கத்தில் கிருத்திகாவின் அகல் மெழுகுவர்த்தி கடை செயல்பட்டு வருகின்றது. கிருத்திகா B.Sc Computer science பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஓர்‌ தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். கொரனா காலத்தில் தனக்கென சுய அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடிவெடுத்த இவர் மெழுகு வர்த்தி செய்வதற்குத் தொடங்கியுள்ளார்.

இதையும் வாசிக்க: நீங்க யூஸ் பண்ணுற டீ தூள் தரமானதா… ஈசியா வீட்லயே டெஸ்ட் பண்ணலாம்…

கிருத்திகா தனது 9ஆம் வகுப்பிலிருந்தே தன் வீட்டுத் தேவைக்காக மெழுகுவர்த்தி செய்வதைப் பொழுதுபோக்காக வைத்துள்ளார். அந்த அனுபவத்தால் தற்போதைய கால அப்டேட்டுக்கு ஏற்ப அதனை வணிகமாகியுள்ளார். மேலும், மற்ற மெழுகுவர்த்தியை விட தான் தயாரிக்கும் மெழுகுவர்த்தி தனித்துவமாக இருக்க வேண்டும் என இயற்கையிலிருந்து கிடைக்கும் மெழுகைக் கொண்டு மெழுகுவர்த்தி செய்கின்றார். அதாவது சோயா மெழுகு, தேனி மெழுகைக் கொண்டு மெழுகுவர்த்தி தயார் செய்கின்றார்.

இதுகுறித்து கீர்த்திகா கூறுகையில், “நாங்கள் இதை ஐந்து வருடமாகச் செய்து வருகின்றோம். எனக்குச் சிறுவயதிலிருந்து மெழுகுவர்த்தி செய்வதில் ஆர்வம் இருந்தது, அதனால் கொரோனா காலத்தில் வேலை இல்லாத சமயத்தில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். முதல் ஆறு மாதத்திற்கு எந்த ஒரு ஆர்டரும் கிடைக்கவில்லை, அதன் பிறகு தான் மக்களிடம் இது நன்கு சென்றடைந்தது.

அனைவரும் பண்ணும் வழக்கம் போல் இல்லாமல் புதிதாகப் பண்ண வேண்டும் என எண்ணி இயற்கையாகத் தேனிலிருந்து கிடைக்கப்படும் மெழுகைக் கொண்டும், சோயாவிலிருந்து கிடைக்கப்படும் மெழுகைக் கொண்டும் செய்து வந்தோம். மேலும், நம்முடைய சாப்பாடு வகைகள் மற்றும் ஸ்வீட் போன்ற வடிவங்களிலும் மேலும், பொக்கே போன்ற பல வடிவங்களிலும் மெழுகுவர்த்தி தயாரித்து விற்பனை செய்து வருகின்றோம்‌.

விளம்பரம்

ஒவ்வொரு சீசன் சமயங்களைப் பொறுத்து எங்களது விற்பனை காணப்படும். இது மட்டும் இன்றி பர்த்டே கார்டு போன்ற பல வகைகளையும் செய்து வருகின்றோம். மேலும் பல நிர்வாகங்களுக்கும் அவர்களது லோகோ மற்றும் மெழுகுவர்த்தி கொண்ட கார்டு போன்றவற்றையும் செய்துள்ளோம்.

இதையும் வாசிக்க: விலையும் குறைவு… சுவையும் அதிகம்… மலைக்க வைக்கும் மருத்துவபலன் கொண்ட மஞ்சள் பாறை மீன்…

தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் தீபம், ஸ்வீட், இட்லி போன்ற உணவு வகைகள் போன்றவற்றைத் தயார் செய்கின்றோம். ஆரம்பத்தில் மக்களிடம் போய் சேரும் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் தற்போது எதிர்பார்த்த அளவை விட அதிக அளவில் மக்கள் இதை விருப்பமாக வாங்கி செல்கின்றனர். இது சீசன் வியாபாரம் தான் என்பதால் ஒவ்வொரு சமயத்திலும் விற்பனை ஒவ்வொரு விதமாக இருக்கும். பண்டிகை காலங்களில் மட்டும் ஆர்டர் அதிகம் வரும்” எனத் தெரிவித்தார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

13 முதல்வர்கள், 3 முறை குடியரசு தலைவர் ஆட்சி: ஜார்க்கண்டின் 24 ஆண்டுகளில் தனி மெஜாரிட்டி பெறாத கட்சிகள் | Parties that have not won a single majority in Jharkhand in 24 years

Next Post

ரவி, நாமல், சத்தியலிங்கம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

Next Post
ரவி, நாமல், சத்தியலிங்கம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

ரவி, நாமல், சத்தியலிங்கம் - வெளியானது அதிவிசேட வர்த்தமானி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin