ஸ்டார்க் அபாரம்
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பவுலிங் செய்த நிலையில் ஒரு பவுண்டரி கூட விடாமல் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவர் வீசிய ஓவரில் 1,1,2,2,1,1 ரன் மற்றும் ரன் அவுட் என ஸ்டாக் வீசிய ஓவர் அமைந்தது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டிரைக்கில் இருந்த ஜூரல் மிட் விக்கெட் திசையில் அடித்து இரண்டாவது ரன் முயற்சியில் அவுட்டானார். டெல்லி அணியில் 7 பவுலர்கள் பந்து வீசிய நிலையில், அனைவரும் ரன்களை வாரி வழங்கினர்.

