Last Updated:
1960 ஆம் ஆண்டின்போது இந்தியாவின் மக்கள்தொகை 43 கோடியே 60 லட்சமாக இருந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மக்கள்தொகை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து ஐ.நா. நிறுவனம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக மக்கள்தொகைப் பெருக்கம் இருந்து வருகிறது. உலகில் சீனா மற்றும் இந்தியா ஆகியவை அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளாக உள்ளன.
அதிலும் குறிப்பாக இந்தியா தற்போது சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடதில் இருக்கிறது. மக்கள்தொகை அதிகரிப்பால் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதே அளவு நன்மைகளும் இருக்கின்றன. இந்தியாவில் பிறப்பு விகிதம் 2.1 லிருந்து 1.9 ஆகக் குறைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் மக்கள்தொகை நீண்ட கால அடிப்படையில் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் 68 சதவீத மக்கள்தொகை என்பது பொதுமக்கள் வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்களாக இருக்கிறது.
அதாவது, 68 சதவீத மக்கள்தொகை 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்களாக இந்தியாவில் உள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்டோர் சதவீதம் 7 ஆக இந்தியாவில் இருக்கிறது. இந்நிலையில், ஐ.நா. அமைப்பான ஸ்டேட் ஆஃப் வேர்ல்ட் பாப்புலேஷன் அமைப்பு இந்தியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு இறுதியில் 146 கோடியாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டின்போது இந்தியாவின் மக்கள்தொகை 43 கோடியே 60 லட்சமாக இருந்தது. அப்போது பெண்கள் சராசரியாக இந்தியாவில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
June 10, 2025 9:39 PM IST
இந்த ஆண்டு இறுதியில் இந்திய மக்கள் தொகை எவ்வளவாக இருக்கும்? ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட தகவல்


