• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்த ஆண்டில் இன்கம் டேக்ஸ் ஃபைல் பண்ணும்போது எவ்வளவு வரிப்பணத்தை சேமிக்கலாம்…?

GenevaTimes by GenevaTimes
April 11, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்த ஆண்டில் இன்கம் டேக்ஸ் ஃபைல் பண்ணும்போது எவ்வளவு வரிப்பணத்தை சேமிக்கலாம்…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிதியாண்டு 2025 – 26க்கான இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோருக்கு இந்தப் புதிய வரம்புகள் அமல்படுத்தப்படும். புதிய வரி விதிப்பு முறையின் கீழ், இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்பவர்கள் குறிப்பிடத்தக்க அளவிலான பணத்தைச் சேமிக்கலாம். அப்படிப் பார்க்கும்போது ஒருவருடைய ஆண்டுவாரியான வருமானம் 10 லட்சம், 13 லட்சம், 15 லட்சம், 25 லட்சம், 35 லட்சம் அல்லது 45 லட்சம் ரூபாயாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஒரு வருடத்திற்கு எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.

புதிய வரிவிதிப்பு முறைப்படி இருந்த முந்தைய வரம்புகள் என்ன?

இதற்கு முன்பு இருந்த புதிய வரி விதிப்பு முறையின்படி 3 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அதன் பிறகு மாற்றம் செய்யப்பட்டு ஒரு நிதியாண்டில் 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது என்று சொல்லப்பட்டது. மேலும் 7,00,001 ரூபாயில் இருந்து 10 சதவீதமும், 10,00,001 ரூபாயிலிருந்து 15 சதவீதமும், 12,00,001 ரூபாயிலிருந்து 20 சதவீதமும், 15 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவீதமும் வரி வசூலிக்கப்படும் என்று நியமிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய புதிய வரி விதிப்பு முறையின் கீழ் உள்ள வரம்புகள்

பிப்ரவரி 2025 பட்ஜெட்டின்போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தற்போதைய புதிய வரி விதிப்பு முறையின் கீழ் உள்ள வரம்புகளை அறிவித்தார். அதில் 4 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. 4 லட்சம் ரூபாயில் இருந்து 5% வரியும், 8,00,001 ரூபாய்க்கு 10 சதவீத வரியும், 12,00,001 ரூபாய்க்கு 15 சதவீத வரியும், 16,00,001 ரூபாய்க்கு 20% வரியும், 20,00,001 ரூபாய்க்கு 25 சதவீத வரியும், 24,00,001 ரூபாய்க்கு 30 சதவீத வரியும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் குறிப்பிடத்தக்க மாற்றமாக வரி இல்லாத வருமான வரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. மேலும், இந்த வரம்பு மாத வருமானம் பெறுபவர்களுக்கு 12,75,000 ரூபாய் ஆகும்.

அடுத்தபடியாகப் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வரி இல்லாத வரம்பை விட ஒருவருடைய வருமானம் சிறிய அளவில் அதிகரிக்கும்போது, அவர் மொத்தத் தொகைக்கும் வரி செலுத்தத் தேவை இல்லை. உதாரணமாக, ஒரு தனி நபருடைய வருமானம் ஒரு வருடத்திற்கு 12,05,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அப்படி இருக்க அவர் 5,000 ரூபாய்க்கு மட்டும் 4% வரி செலுத்தினால் போதுமானது.

கணக்கீடுகள்:

10 லட்ச ரூபாய் வருமானத்தில் வரி சேமிப்பு:

2024 – 25 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை: ₹44,200

2025 – 26 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை – 0

ஒவ்வொரு வருடமும் நீங்கள் சேமிக்கும் மொத்த தொகை – ₹44,200

ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்கும் தொகை – ₹3683

இதையும் படிக்க: BOB ஸ்கொயர் டிரைவ் டெபாசிட் ஸ்கீம்: புதிய FD திட்டத்தை அறிமுகப்படுத்திய பேங்க் ஆஃப் பரோடா…!

13 லட்ச ரூபாய் வருமானத்தில் வரி சேமிப்பு:

2024 – 25 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை: ₹88,400

2025 – 26 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை – ₹26,000

ஒவ்வொரு வருடமும் நீங்கள் சேமிக்கும் மொத்த தொகை – ₹62,400

ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்கும் தொகை – ₹5200

15 லட்ச ரூபாய் வருமானத்தில் வரி சேமிப்பு:

2024 – 25 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை: ₹1,30,000

2025 – 26 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை – ₹97,500

ஒவ்வொரு வருடமும் நீங்கள் சேமிக்கும் மொத்த தொகை – ₹32,500

ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்கும் தொகை – ₹2708.33

25 லட்ச ரூபாய் வருமானத்தில் வரி சேமிப்பு:

2024 – 25 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை: ₹4,34,200

2025 – 26 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை – ₹3,19,800

ஒவ்வொரு வருடமும் நீங்கள் சேமிக்கும் மொத்த தொகை – ₹1,14,400

ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்கும் தொகை – ₹9533.33

35 லட்ச ரூபாய் வருமானத்தில் வரி சேமிப்பு:

2024 – 25 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை: ₹7,46,200

2025 – 26 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை – ₹6,31,800

ஒவ்வொரு வருடமும் நீங்கள் சேமிக்கும் மொத்த தொகை – ₹1,14,400

ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்கும் தொகை – ₹9533.33

இதையும் படிக்க: ஆதார் என்ரோல்மென்ட் ID யூஸ் பண்ணி PAN கார்டு லிங்க் பண்ணி இருக்கீங்களா…? அப்போ இத கட்டாயம் செஞ்சிடுங்க…!

45 லட்ச ரூபாய் வருமானத்தில் வரி சேமிப்பு:

2024 – 25 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை: ₹10,58,200

2025 – 26 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பு முறை – ₹9,43,800

ஒவ்வொரு வருடமும் நீங்கள் சேமிக்கும் மொத்த தொகை – ₹1,14,400

ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்கும் தொகை – ₹9,533.33

First Published :

April 11, 2025 5:45 PM IST

Read More

Previous Post

சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் | rajasthan royals captain Sanju Samson fined Rs 24 lakhs ipl 2025

Next Post

உத்தரபிரதேசத்தில் கனமழைக்கு 22 பேர் பலி | Makkal Osai

Next Post
உத்தரபிரதேசத்தில் கனமழைக்கு 22 பேர் பலி | Makkal Osai

உத்தரபிரதேசத்தில் கனமழைக்கு 22 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin