• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தோனேசியாவின் மிக உயரிய ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதைப் பெற்ற பிரதமர்.. இந்தியர்களுக்கு சமர்ப்பிப்பதாக பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 7, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்தோனேசியாவின் மிக உயரிய ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதைப் பெற்ற பிரதமர்.. இந்தியர்களுக்கு சமர்ப்பிப்பதாக பேச்சு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 07, 2026 3:59 PM IST

பாதுகாப்பு, தொழில்நுட்பம், கலாச்சாரம், கல்வி மற்றும் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து பெரும் முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன – பிரதமர் மோடி

விருதைப் பெறும் பிரதமர் மோடி
விருதைப் பெறும் பிரதமர் மோடி

மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய அரசு விருதான ‘பிந்தாங் ரெபப்ளிக் இந்தோனேசியா அதிபூர்ணா’ (Bintang Republik Indonesia Adipurna) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசிய அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பான அரசு விழாவில், அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) இந்த விருதை பிரதமர் மோடிக்கு நேரில் அணிவித்தார்.

​இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள், நாகரிகப் பிணைப்புகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி ஆற்றிய அசாதாரண பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் பிரபோவோ பெருமிதத்துடன் தெரிவித்தார்.

விருதைப் பெற்றுக் கொண்ட பின் கூட்டாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

​”இந்தோனேசியாவின் இந்த மிக உயரிய விருது எனக்கு அளிக்கப்பட்ட பெரும் மதிப்பாகும். இந்த கௌரவம் எனக்குக் கிடைத்ததல்ல, இது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும், கோடிக்கணக்கான குடிமக்களுக்கும் சொந்தமானது. இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆழமான உறவின் அடையாளமாகும். இதற்காக அதிபர் பிரபோவோ மற்றும் இந்தோனேசிய அரசுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

​மேலும், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கலாச்சாரம், கல்வி மற்றும் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து பெரும் முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் ‘அக்ட் ஈஸ்ட் பாலிசி’, மற்றும் ‘மகாசாகர் தொலைநோக்குத் திட்டம்’ ஆகியவற்றின் கீழ், சுதந்திரமான மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த 3 நாடுகள் பயணம் (இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் தூதரக முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு உலகளாவிய அங்கீகாரமாக இந்த விருது பார்க்கப்படுகிறது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்தோனேசியாவின் மிக உயரிய ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதைப் பெற்ற பிரதமர்.. இந்தியர்களுக்கு சமர்ப்பிப்பதாக பேச்சு

Read More

Previous Post

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: ட்ரயலுக்கு ஒத்திவைப்பு

Next Post

El Nino | கொதிக்கும் பசிபிக் பெருங்கடல்.. வினாடிக்கு 12 ஹிரோஷிமா அணுகுண்டுகள்.. உலகை மிரட்டும் ‘எல் நினோ’! | உலகம் போட்டோகேலரி

Next Post
El Nino | கொதிக்கும் பசிபிக் பெருங்கடல்.. வினாடிக்கு 12 ஹிரோஷிமா அணுகுண்டுகள்.. உலகை மிரட்டும் ‘எல் நினோ’! | உலகம் போட்டோகேலரி

El Nino | கொதிக்கும் பசிபிக் பெருங்கடல்.. வினாடிக்கு 12 ஹிரோஷிமா அணுகுண்டுகள்.. உலகை மிரட்டும் 'எல் நினோ'! | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin