• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ரீல் பதிவிட்ட சிறுமி…! பெற்றோர் கைது… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ரீல் பதிவிட்ட சிறுமி…! பெற்றோர் கைது… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 05, 2025 8:59 PM IST

உத்தரப்பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒரு நிமிட வீடியோவை உருவாக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் இந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

Rapid Read
News18
News18

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர், இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்ததற்காக சிறுவர் காவல் மையத்திற்கு அனுப்பப்பட்டார். மேலும், அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பிரண்ட்ஸ் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொஹல்லா தாகியா ஆசாத் நகர் திலாவில் நடந்தது.

அக்டோபர் 27 அன்று, 12 வயது சிறுமி ஒரு நிமிட வீடியோவை உருவாக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் இந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானதை அடுத்து நெட்டிசன்களும், பல இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். அவர்கள் அந்த சிறுமிக்கும், அவளது குடும்பத்தினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சமூக ஊடகங்களில் எட்டாவா காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையினரை டேக் செய்து புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த சிறுமிக்கு எதிராக உள்ளூர் காவல் நிலையத்தில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், சிறுமி கைது செய்யப்பட்டு சிறுவர் காவல் மையத்திற்கு அனுப்பப்பட்டார். அதே நேரத்தில் அவரது பெற்றோர் ஷபீர் மற்றும் ஷபினா இந்தச் செயலைப் பற்றி அறிந்திருந்தும், அவர்களது பெண்ணைத் தடுக்க முயற்சிக்கவில்லை. இந்த அலட்சியம் ஒரு குற்றமாகக் கருதப்பட்டதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, “அந்தச் சிறுமி இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளை இணையத்தில் வெளியிட்டார். சிறுமியின் பெற்றோருக்கு தங்கள் மகள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோவை உருவாக்கப் போகிறாள் என்பது தெரியும். மேலும், இந்தச் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Longest River | 10 நாடுகள் வழியாக பாயும் உலகின் இரண்டாவது நீளமான நதி… எது தெரியுமா…?

சமூக வலைதளங்களில் தன்னுடைய ஃபாலோவர்களை அதிகரிப்பதற்காக அந்த வீடியோவை உருவாக்கியதாக சிறுமி எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் அவளது பெற்றோர்களை கைது செய்துள்ளோம். மக்கள் அந்த வீடியோவை மீண்டும் பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ பரவலுக்குக் காரணமானதாகக் கூறப்படும் மற்றொரு நபர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தனது செயலுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு வீடியோவும் வெளியானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 05, 2025 8:59 PM IST

Read More

Previous Post

ட்ரம்ப்பை எதிர்க்க தயார்: புதிய மேயர் பகிரங்க எச்சரிக்கை

Next Post

Womens World Cup : மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு.. | விளையாட்டு

Next Post
Womens World Cup : மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு.. | விளையாட்டு

Womens World Cup : மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin