Last Updated:
நாட்டில் பழமையான மொழிகளில் ஒன்றான கன்னடத்தின் வளர்ச்சிக்கு உரிய நிதி அளிக்காதது அநீதி என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளித் தரும் மத்திய அரசு கன்னட மொழியைப் புறக்கணிப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக ராஜ்யோட்சவா கொண்டாட்டத்தில் சித்தராமையா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாட்டில் பழமையான மொழிகளில் ஒன்றான கன்னடத்தின் வளர்ச்சிக்கு உரிய நிதி அளிக்காதது அநீதி என்றார்.
கன்னட மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட போதும் மற்ற செம்மொழிகளை வளர்க்க மத்திய அரசு கொடுக்கும் நிதியை கன்னடத்துக்கு கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்தி, சமஸ்கிருதத்தை வளர்க்க கொடுக்கும் நிதியை மற்ற இந்திய மொழிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும், இது நியாயமல்ல என்றும் கூறினார்.
November 01, 2025 5:24 PM IST
“இந்தி, சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி… கன்னடத்திற்கு அநீதி” – மத்திய அரசை சாடிய கர்நாடக முதல்வர் சித்தராமையா


