தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.
நாடு முழுவதும் சுதந்திர நாள் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்தியாவின் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, ஜிஎஸ்டி வரி குறைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றைப் பற்றி பேசினார். அவர் மொத்தமாக 103 நிமிடங்கள் இன்று உரையாற்றினார். இது பிரதமர் மோடியின் நீண்ட உரையாகும். மோடி, கடந்த 2014-ல் 98 நிமிடங்கள் 2016ல் 96 நிமிடங்கள் பேசியிருந்தார். இன்றைய உரையின் மூலமாக பிரதமர் மோடி, அவரது சாதனையையே முறியடித்துள்ளார்.

