Last Updated:
உலகின் இரு பெரும் ஜனநாயக சக்திகளின் உறவில் முக்கியமான அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது என
இந்தியா – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை முடித்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கை கையெழுத்தான பிறகு பேசிய அவர், இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டும் அல்ல என்றும் வளர்ச்சிக்கான புதிய வரைபடமாக இருக்கும் என்றார்.
தானும் ஒரு இந்திய வம்சாளியை சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்வதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியால் நாம் அனைவரும் பலன் பெறுகிறோம் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.


