Last Updated:
இந்திய வங்கிகளில் 67 ஆயிரம் கோடி ரூபாய் கேட்பாரற்று இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல், கனரா, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் அதிகமாக உள்ளன.
இந்திய வங்கிகளில் கேட்பாரற்று 67,000 கோடி ரூபாய் வரை பணம் வைப்பு தொகையாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட பதிலுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நடந்து முடிந்த ஜூன் காலாண்டுடன் 67 ஆயிரத்து 3 கோடி ரூபாய் பணம் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.
இதில் 87 சதவீதம் அதாவது 58,330 கோடியே 26 லட்ச ரூபாய் பொதுத் துறை வங்கிகளில் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதில் அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கியில் 19,329 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,910 கோடியும், கனரா வங்கியில் 6,278 கோடியும், பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 5,277 கோடி ரூபாயும் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வங்கிகளில் 8,673 கோடி ரூபாய் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாகவும் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் 2063 கோடி ரூபாய் கேட்பாரற்று இருப்பதாகவும் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாமலோ அல்லது செலுத்தப்படாமலோ இருந்தால் அவற்றை உரிமைக் கோரப்படாத டெபாசிட் என வகைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
July 30, 2025 8:54 AM IST