Last Updated:
தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலரின் மதிப்பு 89 ரூபாய் 41 பைசா என்ற குறைந்தபட்ச நிலையைத் தொட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 90 ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
கடந்த 27ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 89 ரூபாயாக இருந்து குறைந்தபட்ச நிலையை எட்டியுள்ளது. சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கிய இந்த ரூபாய் மதிப்பின் சரிவு, 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத அளவு மேலும் தீவிரம் அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது, 1990-களின் முற்பகுதியில் ஒரு டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 22 ரூபாய் 74 பைசாவாக இருந்தது. நரசிம்ம ராவ் ஆட்சியில் 42 ரூபாய் வரை நீடித்தது.
அதன் பிறகு, வாஜ்பாய் ஆட்சியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 43 ரூபாய் 58 பைசாவைத் தொட்டது. மேலும், 2013ஆம் ஆண்டு வாக்கில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. மன்மோகன் சிங் ஆட்சிக் கால முடிவில் 63 ரூபாய் 33 பைசா என்ற நிலையை அடைந்தது. இந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலரின் மதிப்பு 89 ரூபாய் 41 பைசா என்ற குறைந்தபட்ச நிலையைத் தொட்டுள்ளது.
வெளிநாட்டுப் பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பது மற்றும் அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆரம்பகால ஆதரவின்மை உள்ளிட்டவை ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்ததே இதற்கு காரணம் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கெனவே சுட்டிக்காட்டி உள்ளது.
December 02, 2025 7:37 AM IST


