இந்தியாவின் கலாச்சாரம், வடிவமைப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பல சிறந்த ஆளுமைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அன்னை தெரசா போன்ற சிறந்த ஆளுமைகளும் அடங்குவர். இருப்பினும், பலகட்ட விவாதங்களுக்குப் பிறகு, தேசத்தந்தை மகாத்மா காந்தியை தேர்ந்தெடுப்பதில் அனைவருக்கும் இடையே பொதுவான உடன்பாடு ஏற்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.