ரிசர்வ் வங்கியின் விவரங்களின்படி, இந்திய ரூபாய் நோட்டுகளில் யாருடைய படத்தை அச்சிட வேண்டும் என்பதற்கான பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதன்படி, ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரசா, அபுல் கலாம் ஆசாத் போன்ற சிறந்த மனிதர்களின் பெயர்கள் முக்கியமாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் இறுதியில், மகாத்மா காந்தியின் பெயர் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.