அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது எதிரில் வேகமாக வந்த கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த நிவேஷ், கவுதம் குமார் ஆஅகிய இருவரும் அமெரிக்காவின் அரிசோனாவை சேர்ந்த ஸ்டேட் யூனிவர்சிட்டியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்நிலையில், அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டியில் காரில் அவர்களது நண்பர்களுடன் இருவரும் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் நிவேஷ், கவுதம் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சென்ற மாணவர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:
தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்… பீதியில் மக்கள் !
விசாரனையில் இவர்கள் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மற்றும் ஜனகாம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தை அரிசோனா போலீஸார் ஆய்வு செய்தனர். இறந்தவர்களின் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்படுள்ளது. இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரிசோனா காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து அதிர்ச்சியளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
