இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
வெய் ஹுவாக்சியாங் ஓகஸ்ட் 25 அன்று தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பின்னர் இலங்கைக்கான சீனத் தூதராகப் பொறுப்பேற்றார்.
வழங்கப்பட்ட அன்பளிப்பு
இந்த சந்திப்பின் போது, சீனத் தூதர் பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தையும் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசமும் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி அனுர இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
இதேவேளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அனுர குமார உட்பட பலரை சந்தித்து வரும் நிலையில் புதிய சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்திததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

