Last Updated:
இந்திய பங்குச்சந்தைகளில் 6 நாட்களாக ஏற்றம், முதலீட்டாளர்களுக்கு 5லட்சம் கோடி ரூபாய் லாபம். சென்செக்ஸ் 1078 புள்ளிகள் உயர்ந்து 77984, நிஃப்டி 307 புள்ளிகள் உயர்ந்து 23658.
இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதக சூழலால் முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம் கிடைத்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 6 வேலை நாட்களாக ஏற்றம் காணப்படுகிறது. வர்த்தகம் தொடங்கியதும் இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பாக மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸில் 500க்கும் அதிகமான புள்ளிகள் உயர்ந்தன. வர்த்தக நேர முடிவில் 1078 புள்ளிகள் உயர்ந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77984 புள்ளிகளாக வணிகத்தை நிறைவு செய்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 307 புள்ளிகள் உயர்ந்து 23ஆயிரத்து 658 புள்ளிகளாக வணிகம் முடிந்தது. வங்கிகள், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் 3 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. Kotak Mahindra Bank, NTPC, SBI, Power Grid Corp, Tech Mahindra,ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன,
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, Titan Company, IndusInd Bank, Trent, Bharti Airtel ஆகிய நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன. Kotak Mahindra Bank, Chambal Fertilisers, Shree Cements, Bajaj Finance, ICICI Bank உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத உச்சபட்ச விலைக்கு விற்கப்பட்டன.
March 24, 2025 7:59 PM IST
இந்திய பங்குச்சந்தை கிடுகிடு உயர்வு… முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம்