சிங்கப்பூரில் நடந்த இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் தமிழ் ஊழியர்களை பாராட்டி சிறப்பித்தது இந்திய தூதரகம்.
ரிவர் வேலி பகுதியில் உள்ள கடைவீட்டில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது, அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழ் ஊழியர்கள் அங்கிருந்த பிள்ளைகள் மற்றும் பெரியவர்களை காப்பாற்றி உதவினர்.
வீர தீர செயல் புரிந்த தமிழ்நாட்டு ஊழியர்கள்… நினைவு பரிசு வழங்கி வாழ்த்திய சிங்கப்பூர் அதிபர்!
அதில் மூன்றாம் மாடி விளிம்பில் சிக்கி இருந்த 6 வயது சிறுமியை, தன் உயிரையும் பொருட்படுத்தாது ஊழியர்கள் குழு ஒன்று பத்திரமாக மீட்டது.
இந்நிலையில், இந்திய நாட்டுக்கே பெருமை சேர்த்த தமிழ் ஊழியர்களின் வீர செயலை சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரக உயர் அதிகாரி டாக்டர் சில்பாக் பாராட்டினார்.
இந்தர்ஜித் சிங், சுப்பிரமணியன் சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன், சின்னப்பா கண்ணதாசன், கோவிந்தராஜ் இலங்கேஸ்வரன், முத்துக்குமார், வருவேல் கிறிஸ்டோபர் மற்றும் சிவசாமி விஜயராஜ் ஆகியோரின் தன்னலமற்ற தைரியத்தை பாராட்டிய தூதரகம் அவர்களை கெளவுரவித்தது.
தூதரக உயர் அதிகாரி டாக்டர் சில்பாக் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
ஊழியர்கள் அனைவரையும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் டாக்டர் சில்பாக். மேலும் அவர்களுக்கு அன்பளிப்பு பைகளும் வழங்கப்பட்டன.
தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய 7 தமிழ் ஊழியர்களையும் அவர் பாராட்டி நாட்டுக்கே பெருமை சேர்த்ததாக சொன்னார்.
அவர்கள் அங்கு கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவர்களை தூதரகம் கௌரவப்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டினார்.
பிள்ளைகளை காப்பாற்றிய “தமிழ் ஊழியர்கள்” – பாராட்டி கெளவுரவித்த சிங்கப்பூர்

