இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதேபோல இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

