• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்? காம்பீருடன் மோதும் முன்னாள் வீரர்…

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்? காம்பீருடன் மோதும் முன்னாள் வீரர்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது தொடர்பான நேர்காணலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது தீவிரமாக நடத்தி வருகிறது.

அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் தேர்வு செய்யப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு போட்டியாக முன்னாள் வீரர் ஒருவர் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார்

அவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் நிறைவு பெற்றது. இருப்பினும், டி20 உலகக்கோப்பையை கவனத்தில் கொண்டு டிராவிட்டின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

விளம்பரம்

இந்நிலையில், மீண்டும் இதே பொறுப்பில் தான் நீடிக்க விரும்பவில்லை என்று டிராவிட் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதற்கிடையே தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதுகுறித்த நேர்காணல் தற்போது நடைபெற்று வருகிறது. கவுதம் காம்பீர்தான் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேர்காணலின்போது கவுதம் காம்பீருக்கு சவால் கொடுக்கும் வகையில், முன்னாள் வீரர் டபிள்யூ.வி. ராமன் நேர்காணலை எதிர்கொள்வார் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

மதியம் 12 மணியளவில் கவுதம் காம்பீருடன் பிசிசிஐ நிர்வாகிகள் நேர்காணல் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. நாளையும், நேர்காணல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டபிள்யூ.வி. ராமன் பங்கேற்கலாம். இதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர் ஜூலை 1 ஆம் தேதி முதல் 2027 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பொறுப்பில் இருப்பார்.

.

Read More

Previous Post

நாடாளுமன்றத்தில் இனி ‘சா்வாதிகாரம்’ பலிக்காது: காங்கிரஸ்

Next Post

ஈப்போவில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டவர்:ஒன்பது பேர் கைது | Makkal Osai

Next Post
ஈப்போவில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டவர்:ஒன்பது பேர் கைது | Makkal Osai

ஈப்போவில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டவர்:ஒன்பது பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin