சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்த இந்திய கட்டுமான ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் ஜன்னல் வழியாக பெண்ணை பார்த்த அந்த ஊழியர், பின்னர் பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
தலை நசு@கி இறந்த வெளிநாட்டு ஊழியர்… மேற்பார்வையாளர் மீது குற்றம் இல்லை என தீர்ப்பு
இந்நிலையில், இந்திய நாட்டவரான 41 வயதுமிக்க திருப்பதி மோகன்தாஸ் என்ற அந்த கட்டுமான ஊழியருக்கு நேற்று அக்.8 ஆம் தேதி 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வீடு புகுந்த இரண்டு குற்றச்சாட்டுகள் உட்பட நான்கு குற்றச்சாட்டுகள், தண்டனையின்போது பரிசீலிக்கப்படும்.
இந்த ஆண்டு ஏப்ரல் 29 அன்று, இரவு சுமார் 10.30 மணியளவில், மோகன்தாஸ் அந்த பெண்ணின் வீட்டை கடந்து நடந்து சென்றபோது, நிர்வாணமாக இருந்த பெண்ணை ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார்.
சுமார் 35 வயதுமிக்க அந்த அமெரிக்கப் பெண்ணால் ஈர்க்கப்பட்ட ஊழியர் மீண்டும் மறுநாள் அவரைப் பார்க்க வேண்டும் என தீர்மானித்தார்.
பின்னர் மறுநாள், இரவு சுமார் 11.30 மணியளவில், மோகன்தாஸ் தனது லாரியை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, மீண்டும் அந்த பெண்ணின் வீட்டு பக்கம் நடந்து சென்று பெண்ணைப் பார்த்துள்ளார்.
பிறகு அங்கேயே சுமார் ஒரு மணி நேரம் சுற்றித் திரிந்த மோகன்தாஸ், பால்கனி வழியே ஏறி அதன் விளிம்பில் நின்று, பெண் தூங்குவதைப் பார்த்து கொண்டே இருந்துள்ளார்.
பின்னர், வீட்டின் படுக்கையறைக்குள் நுழைந்த மோகன்தாஸ், பெண்ணின் கால் விரல்களை இரண்டு முறை தொட்டார். ஊழியரை கண்டதும் அதிர்ச்சி பெண் கூச்சலிட்டதும், மோகன்தாஸ் படுக்கையறையிலிருந்து தப்பி வெளியே ஓடினார்.
அதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் மே 3 ஆம் தேதி, நள்ளிரவு 1.30 மணியளவில், இரண்டாவது முறையாக மோகன்தாஸ் அந்தப் பெண்ணின் அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தார்.
பால்கனியில் சுமார் மூன்று மணி நேரம் நின்றுகொண்டு ஜன்னல் வழியாக அந்த பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்த மோகன்தாஸ், தவறான செயலை செய்துகொண்டிருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அந்த பெண் விழித்திருந்துள்ளார்.
பால்கனியில் இருந்து ஏதோ சத்தம் வந்ததை உணர்ந்த அந்தப் பெண் வெளியே சென்று பார்த்தபோது, மோகன்தாஸின் நிழலை அவர் கண்டார்.
பின்னர் அந்த பெண் குடியிருப்பு பாதுகாப்பு காவலர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இறுதியாக, மே 4 ஆம் தேதி நள்ளிரவு நேரத்துக்கு முன்பாக, குடியிருப்புக்கு வெளியே உள்ள பகுதியில் மோகன்தாஸ் சுற்றித் திரிவதைக் கண்ட காவல்துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண்ணை மீண்டும் பார்க்க விரும்பி அங்கு வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.