Last Updated:
சுப்மன் கில் விரைவில் சர்வதேச ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், விரைவில் சர்வதேச ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணி கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவித்தார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலும் தனது ஓய்வை அறிவித்தார். ஆனால் வரும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியில் விளையாட ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்காக தயாராகும் வகையில், இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.
இதனால் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய அணி இதற்கடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த தொடரில் தான் சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கலாம் என பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் நன்றாகவே விளையாடி இருந்தார். சிறப்பாக கேப்டன்சியும் செய்வதால், அவர் ஒருநாள் போட்டிகளில் விரைவில் கேப்டனாக்கப்படலாம் என்றே ரசிகர்களும் கூறுகிறார்கள்.
Mumbai,Maharashtra
July 11, 2025 2:09 PM IST