இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அதிக வணிகத்தை மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார்.
அதிக வரி வசூலிக்கும் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு 10% பரஸ்பர வரி விதிப்பை ஏப். 5 முதல் அமலுக்குக் கொண்டுவந்தார். இதன்படி இந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.
இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் தற்காலிகத் தீர்வை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்ல ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
அதன்படி ஆப்பிள் நிறுவனம், முதற்கட்டமாக 3 விமானங்களிலும், பின்னர் 2 விமானங்களிலும் முழுக்க ஐ-போன்களை எடுத்துச் சென்றுள்ளது.

