• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இந்திய ஊழியர் 2வது ரகசிய திருமணம்.. சிங்கப்பூர் TO நாகூர் – போலீசில் சிக்கிய கதை

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
இந்திய ஊழியர் 2வது ரகசிய திருமணம்.. சிங்கப்பூர் TO நாகூர் – போலீசில் சிக்கிய கதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் வேலைக்கு வந்த இந்திய ஊழியர் 2வது ரகசிய திருமணம் செய்து கொண்டு பிடிபட்டுள்ளார்.

முதல் திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து அவர் தனது சக ஊழியரை ரகசியமாக மணந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது, இது சட்டப்படி குற்றமாகும்.

சிங்கப்பூரில் பணிபுரியும் புதுக்கோட்டை ஊழியர்… சொந்த வீட்டில் 89 சவரன் தங்க நகைகள் திருட்டு

இரண்டாவது மனைவியின் பிரசவத்துக்காக வேண்டி தனது முதல் மனைவி பணிபுரிந்த மருத்துவமனைக்கு சென்றபோது அவர் பிடிபட்டார் என சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், 49 வயதான இந்திய நாட்டவரான வைத்தியலிங்கம் முத்துக்குமார் என்ற ஊழியருக்கு நேற்று (ஆக.21) மூன்று மாதங்கள் மற்றும் மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நிரந்தரவாசம் பெறவேண்டி விண்ணப்பித்ததில் தனக்கு வேறு எந்த திருமணங்களும் நடக்கவில்லை என்று பொய்யாக அறிவித்த குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.

என்ன நடந்தது?

தற்போது 55 வயதாகும் முதல் மனைவியான சிங்கப்பூர் பெண்ணை வைத்தியலிங்கம் கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியாவில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் 2011 இல், அவர் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்க்காக சிங்கப்பூர் வந்தார் என்றும் இங்கேயே வேலை செய்யத் தொடங்கினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது வேலை செய்யும் இடத்தில் சால்மா பீ அப்துல் ரசாக் என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வைத்தியலிங்கம் ஏற்கனவே திருமணமானவர் என்பதை சால்மா அறிந்திருந்தார்.

பின்னர் 2022 இல், வைத்தியலிங்கமும் 43 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த சல்மாவும் திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டனர்.

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய வைத்தியலிங்கம், சல்மாவை மணந்த பிறகு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்வதாகவும் சல்மாவிடம் உறுதியளித்துள்ளார்.

இதனை அடுத்து ஆகஸ்ட் 2022 இல், வைத்தியலிங்கமும் சல்மாவும் இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர், இந்த திருமணம் தமிழ்நாட்டிலுள்ள நாகூரில் பதிவு செய்யப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு, வைத்தியலிங்கமும் சல்மாவும் சிங்கப்பூர் திரும்பிய பிறகும் தனது முதல் மனைவியுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார், இருப்பினும் சல்மாவையும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார்.

செப்டம்பர் 14, 2023 அன்று, வைத்தியலிங்கம் மற்றும் சல்மாவுக்கும் ஆண் குழந்தை பிறந்தது, அச்சமயம் பிரசவத்துக்காக வேண்டி தனது முதல் மனைவி பணிபுரிந்த மருத்துவமனைக்கு சென்றபோது அவர் மாட்டிக்கொண்டார்.

இதனை அடுத்து, ஜூன் 12, 2024 அன்று, தனது முதல் மனைவியை ஆதரவாக வைத்து தனக்கு நிரந்தரவாசி அந்தஸ்துக்கு வேண்டும் என ICA ஆணையத்திடம் வைத்தியலிங்கம் விண்ணப்பித்துள்ளார், அந்த விண்ணப்பத்தில் தனக்கு வேறு திருமணம் ஆகவில்லை என பொய் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, ஜூலை 2024 இல், சல்மா மனிதவள அமைச்சகத்திடம் புகார் செய்தார். அதாவது தாம் வைத்தியலிங்கத்தை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்தவர் எனவும் புகார் கூறினார்.

பின்னர், ஒரே நேரத்தில் இருதார மணக் குற்றம் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த வழக்கு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

சட்டம்

இருதார மணம் தொடர்பான குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை கட்டாய சிறைத்தண்டனையும், S$10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

ரயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிய பயணியின் தலை, கழுத்து – “SBS டிரான்சிட் நிறுவனம் 100% பொறுப்பு”

Read More

Previous Post

அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. நான் அவரின் தீவிர ரசிகன்- அமீர்கான் | Makkal Osai

Next Post

Tamilmirror Online || லொக்கோ​ கைது செய்ய முடியாதாம்: சிரிக்கிறார் பிமல்

Next Post
Tamilmirror Online || லொக்கோ​ கைது செய்ய முடியாதாம்: சிரிக்கிறார் பிமல்

Tamilmirror Online || லொக்கோ​ கைது செய்ய முடியாதாம்: சிரிக்கிறார் பிமல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin