ரிவர் வேலி பகுதியில் உள்ள கடையில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டது, அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெளிநாட்டு ஊழியர்கள் அங்கிருந்த பிள்ளைகள் மற்றும் பெரியவர்களை காப்பாற்றி உதவினர்.
அதில் மூன்றாம் மாடி விளிம்பில் சிக்கி இருந்த 6 வயது சிறுமியை, தன் உயிரையும் பொருட்படுத்தாது வெளிநாட்டு ஊழியர்கள் குழு ஒன்று பத்திரமாக மீட்டது.
இந்நிலையில், அவர்களை பாராட்டும் விதமாக நடந்த ஒரு நிகழ்வில், சிறுமியின் தாயார் லியு லிங் என்பவர் தனது மகளை மீட்ட ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது கண்ணீர் வடித்தார்.
“என் மகளின் உயிரைக் காப்பாற்ற இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பல ஹீரோக்கள் இங்கு இருந்தது அவளின் அதிர்ஷ்டம்” என்று லியு கூறினார்.
தொண்டூழிய அமைப்பான ItsRainingRaincoats ஏற்பாடு செய்த சந்திப்பு நிகழ்வில் லியு மற்றும் அவரது கணவரும் கலந்து கொண்டனர், அங்கு 15 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்கள் மீட்ட குழந்தைகளின் குடும்பங்களும் வரவழைக்கப்பட்டன.
இதற்கு முன்னர் மனிதவள அமைச்சகம்; இந்தர்ஜித் சிங், சுப்பிரமணியன் சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன் மற்றும் சிவசாமி விஜயராஜ் ஆகியோரின் தன்னலமற்ற தைரியத்தை பாராட்டி கெளவுரவித்தது.
இந்த தீ விபத்தில் 10 வயது ஆஸ்திரேலிய சிறுமி ஒருவர் உயிரிழந்தார் என்றும், மேலும் ஆறு பெரியவர்களும் 15 குழந்தைகளும் காயமடைந்தனர் என்றும் தகவல் வெளியானது.
Photo: ItsRainingRaincoats/Facebook

