30
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்யக்கோரி யாழ். மாவட்ட கடற்தொழில் அமைப்புகளால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று (01) முற்பகல் 11.30 மணியளவில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்றலில் யாழ். மாவட்ட கடற்தொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தன.
யாழ்ப்பாணம் மருதடிச் சந்தியில் ஆரம்பித்த குறித்த போராட்டமானது, இந்திய துணைத் தூதரகம் முன்றலில் நிறைவுற்றது.
இதன்போது கடற்தொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


&w=1200&resize=1200,675&ssl=1)