புதிய பதவிக் காலத்தின் முதல் விஜயத்தினை இலங்கைக்கு மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் எம்.யூ.எம் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடினார்.
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, எஸ். ஜெய்சங்கர் மீண்டும் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, இரு நாடுகளின் வலுவான உறவுகளை மதிப்பாய்வு செய்து அவற்றை மேலும் மேம்படுத்த உறுதியளிக்கப்பட்டதோடு, பிராந்திய மற்றும் சர்வதேச பல்தரப்பு சபைகளில் நெருக்கமாகப் பணியாற்றவும் எதிர்பார்ப்பதாக, அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மேலும் 106 வீடுகள் கையளிப்பு
நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்


