Last Updated:
இந்திய அரசு பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதியின் நீரை முற்றிலுமாக நிறுத்தியது.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஜீலம், சிந்து மற்றும் செனாப் நதிகள் பாகிஸ்தானுக்கு நீர் ஆதாரமாக திகழ்கின்றன. இந்த சூழலில், கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானுடனான நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்களை இந்திய அரசு ரத்து செய்தது.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் ரேசி மாவட்டத்தில் இருந்து சலால் அணை வழியாக பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை இந்திய அரசு நிறுத்தியது. இதனால் செனாப் நதியில் வெகுவாக நீரோட்டம் குறைந்து வறட்சியான பகுதியாக காணப்பட்டது. இந்திய அரசின் நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் உள்ளூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்திவருகிறார். நேற்று (4ஆம் தேதி) பிரதமர் மோடி, விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக விமானப்படை தளபதியுடன் மோடி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது. இப்படி தொடர்ந்து பிரதமர் மோடி சந்திப்புகள் நிகழ்த்திவரும் வரிசையில் இன்று, (5ஆம் தேதி) மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்குடன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஒருபக்கம் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளில் இந்திய அரசு மும்முரமாக இருந்துவர மறுபக்கம் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


