Last Updated:
இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால், அடுத்த சுற்றுக்கு எளிதாக இந்திய அணி முன்னேறும் என்று விளையாட்டு விமர்சனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது, ஒரு பந்து வீசப்படுவதற்கு முன்பாகவே இந்திய அணி மோசமான சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் லீக் போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தற்போது விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், மேட்ச் தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணி மோசமான ரெக்கார்டை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
அதாவது, இந்திய அணி இன்றைய போட்டியில் டாஸை வெல்லும் வாய்ப்பை இழந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த வகையில், தொடர்ந்து 12 ஆவது முறையாக ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்துள்ளது. இது எந்த ஒரு அணியும் செய்யாத மோசமான சாதனையாகும்.
முன்னதாக, நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக 11 ஒரு நாள் போட்டிகளில் டாஸில் வெற்றி பெறாமல் இருந்தது. அந்த மோசமான ரெக்கார்டை இந்திய அணி தற்போது முறியடித்து முதல் இடத்திற்கு சென்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இருந்தது.
இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால், அடுத்த சுற்றுக்கு எளிதாக இந்திய அணி முன்னேறும் என்று விளையாட்டு விமர்சனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
February 23, 2025 8:25 PM IST


