Last Updated:
பிரதிகா ராவல் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீராங்கனை ஆவார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்டர் பிரதிகா ராவலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வரும் வியாழன் அன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அரையிறுதி சுற்றுக்கு இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
முதல் அரையிறுதி போட்டி புதன் அன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து வியாழன் அன்று நடைபெறும் 2 ஆவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் அதிர்ச்சி தரும் நிகழ்வாக இந்திய அணியின் ரன் மெஷினாக உருவெடுத்துள்ள தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடந்த போட்டியின்போது முழங்கால் மற்றும் கணுக்காலில் ஏற்பட்டுள்ள அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
October 27, 2025 5:28 PM IST


