உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
சூப்பர் 8 சுற்றில் நடைபெற்ற ஆப்கனுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இன்று வங்கதேசத்தை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். ஒரு சிக்சர் 3 பவுண்டரி விளாசிய கேப்டன் ரோஹித் 11 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளில் ரன் சேர்க்க தடுமாறிய விராட் கோலி, 3 சிக்சருடன் 28 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.
விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 36 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களும், ஷிவம் துபே 34 ரன்களும் சேர்த்தனர்.
இதையும் படிங்க – இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்த நிலையில், தொடர்ந்து சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் அரைச்சதம் விளாசினார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 196 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி வங்கதேச அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
