Last Updated:
இரண்டு மின்னஞ்சல்கள் குறித்து கம்பீர் தரப்பில் டெல்லி ராஜிந்தர் நகர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். டெல்லியில் பாஜக எம்பியாக இருந்த கம்பீர் அதன்பின் அரசியலில் இருந்து விலகி கிரிக்கெட் பக்கம் மீண்டும் திரும்பினார். ஐபிஎல்லில் கொல்கத்தா அணியில் அதன்பின் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற அமைப்பு கடந்த 22 ஆம் தேதி கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது. கவுதம் கம்பீரை கொலை செய்துவிடுவோம் என்று வந்த இரண்டு மின்னஞ்சல்கள் குறித்து கம்பீர் தரப்பில் டெல்லி ராஜிந்தர் நகர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலை ஒரு மெயில், மாலை ஒரு மெயில் என வந்த இரண்டு மெயில்களிலும், “உன்னை கொன்றுவிடுவேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கம்பீர் தரப்பு புகார் அளித்துள்ளது. இதையடுத்து தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எப்ஐஆர் பதிவு செய்யுமாறும் புகாரில் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாஜக எம்பியான கம்பீருக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்கள் வந்தது தொடர்பாக காவலர்கள் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். ஏற்கனவே டெல்லி காவல்துறை சார்பில் கம்பீருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டும் இதே பாணியில் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
Delhi,Delhi,Delhi
April 24, 2025 1:08 PM IST


