இந்தியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பொறுப்புக்காலம் விரைவில் நிறைவு பெற உள்ள நிலையில், புதிய தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்க தொடங்கியுள்ளது. இந்த இந்த பொறுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 30 டெஸ்ட் அல்லது 50 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் புதிதாக தேர்வு செய்யப்படும் பயிற்சியாளரின் பொறுப்பு காலம் இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை இருக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது-
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆர்வத்தை தூண்டி உள்ளது. அந்த பொறுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அனைத்து சர்வதேச பயிற்சியாளர்கள் மீதும் எனக்கு நல்ல மரியாதை உண்டு. ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு என்பது அசாதாரணமான ஒன்று.
மிக திறமையான ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் உள்ளனர். உண்மையிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு என்பது மிகவும் கவனிக்கப்படக்கூடிய ஒன்று. என கூறியுள்ளார்.
முன்னதாக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் குறித்து பேட்டியளித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு வர விரும்பினால் அவர் அதற்காக விண்ணப்பிக்கட்டும். மற்ற விண்ணப்பங்களை போன்று டிராவிட்டின் விண்ணப்பமும் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.
இருப்பினும் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க ராகுல் டிராவிட் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது டிராவிட்டின் பொறுப்பு காலம் நிறைவு பெற்றது.
இருப்பினும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை கவனத்தில் கொண்டு கூடுதலாக அவருக்கு சுமார் 8 மாதங்கள் பொறுப்பு காலம் நீட்டிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இந்தியர்கள் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க – ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறப் போவது யார்? டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்
ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஜஸ்டின் லாங்கர் 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
