விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத ஒன்பதாவது 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் பங்கேற்றதில், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, சூப்பர் எயிட் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை போட்டியிடும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணியை பொருத்தவரை ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதுடன், அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்துள்ளது என்றே சொல்லலாம்.
ஆஃப்கானிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள வங்கதேசத்திற்கும், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மிகமிக குறுகிய அளவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் ரன் ரேட்டில் +2.425 என மற்ற அணிகளால் முந்த முடியாத இடத்தில் இருப்பதால் அரையிறுதி வாய்ப்பு என்பது பிரகாசமாக உள்ளது.
இதையும் படிக்க:
ஆஸ்திரேலியா எனும் மலையை சாய்த்த ஆப்கானிஸ்தான்… அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடனான போட்டியில், வெற்றி பெற்றால் நல்ல ரன் ரேட் வைத்திருப்பதால் 4 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும் . ஒருவேளை தோல்வியடைந்தால் ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் இடையிலான போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியவரும்.
இதையும் படிக்க:
ரன் குவிக்க திணறும் விராட் கோலி… இந்திய அணியின் பேட்டிங் கோச் அதிருப்தி
இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்து வங்கதேச அணியுடனான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் நான்கு புள்ளிகளுடன் அரையிறுதி சுற்றுக்கு ஆஃப்கானிஸ்தான் முன்னேறிவிடும்.
அதேநேரம், இந்தியாவுடனான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், வங்கதேசத்துடனான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அதாவது -0.650விலிருந்து +0.2 என்ற ரன்ரேட்டை எட்டிப்பிடிக்கும் அளவிற்கு மேஜிக் வெற்றியை நிகழ்த்தினால் தான், ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி அரையிறுதியில் ஆஃப்கானிஸ்தான் காலடிஎடுத்து வைக்க முடியும்.
வங்கதேச அணிக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதற்கு முதலில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வியடைய வேண்டும். அதனைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியுடனான கடைசி போட்டியில் வங்கதேசம் இமாலய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
-2.489 என்ற ரன் ரேட்டிலிருந்து ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் அணியின் ரன் ரேட்டை முந்தும் அளவிற்கு வெற்றியை வசப்படுத்தினால் இந்த இரண்டு அணிகளையும் பின்னுக்கு தள்ளி இரண்டு புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறலாம்.
இதையும் படிக்க:
ஒரே பந்தில் ஹிட் விக்கெட், ரன் அவுட் – ஆனாலும் அவுட் ஆகாத பாகிஸ்தான் வீரர்! காரணம் என்ன தெரியுமா?
இதில் இன்னொரு வாய்ப்பும் உள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி, அப்கானிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணியை வீழ்த்தினால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படலாம். அதாவது, வெற்றிபெறும் இரு அணிகள் இணைந்து 123 ரன்கள் வித்தியாசத்தில் மற்ற அணியை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாது.
உதாரனத்திற்கு, ஆஸ்திரேலியா இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால், இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறும்.
சூப்பர் 8 சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் அணி, அரையிறுதியில் மற்றொரு பிரிவில் இரண்டாமிடம் பிடிக்கும் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
