Last Updated:
மிகச் சிறந்த பவுலராக பும்ரா அறியப்பட்டாலும் இந்த புள்ளிவிவரங்கள் அவருக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளன.
சர்வதேச அளவில் டாப் பவுலராக அறியப்படும் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டி முடிவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய நிலையில் அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இரண்டாவது மேட்சில் பும்ரா அணியில் இடம் பெறவில்லை. அந்தப் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை கண்டது. மூன்றாவது மேட்சில் பும்ரா விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் எப்போதெல்லாம் பும்ரா அணியில் இடம் பெறுகிறாரோ அந்தப் போட்டிகளில் எல்லாம் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்திருப்பதாக மேட்ச்சின் முடிவுகள் நமக்கு தெரிவிக்கின்றன. பும்ரா இந்திய அணியில் இல்லாத போது 70% போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.
அதேநேரம் பும்ரா விளையாடிய போட்டிகளில் 43 சதவீத போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. அந்த வகையில் மிகச் சிறந்த பவுலராக பும்ரா அறியப்பட்டாலும் இந்த புள்ளிவிவரங்கள் அவருக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளன. பும்ரா டெஸ்ட் விளையாட ஆரம்பித்ததில் இருந்து இந்திய அணி உள்ளூரில் மொத்தம் 27 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 18 போட்டிகளில் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்த 18 போட்டிகளில் இந்திய அணி 14 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் உள்ளூரில் நடைபெற்ற போட்டிகளில் பும்ரா இடம்பெறாத 77.7 சதவீத மேட்ச்களில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பும்ராவுக்கு சவாலான வேலைகளைக் கொடுப்பதற்காக அவருக்கு அவ்வப்போது ஓய்வுகள் வழங்கப்படுகின்றன.
July 17, 2025 4:53 PM IST