டி20 உலகக் கோப்பையின் போது இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை வடிவமைத்த குழுவில் தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.
20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டது. இவற்றில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன.
இவற்றில் இருந்து அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறின. பார்படாசில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த மேட்சில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
20 ஓவர் உலகக்கோப்பையை ஏந்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணி கோப்பையை வென்றதை தொடர்ந்து நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை வடிவமைத்தவர்களில் சென்னையை சேர்ந்த நிகில் சங்கரும் ஒருவர் என்ற தகவல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்த ஆகிப் வானி என்ற நிறுவனத்தில் முன்னணி டிசைனராக நிகில் சங்கர் இருந்து வருகிறார்.
இந்த நிறுவனம், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ஆடைகளையும் வடிவமைத்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
