இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிசிஐ) சவாலானதாக மாறியுள்ளது.
விண்ணப்பங்களுக்கான காலக்கெடு வரும் மே 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த பதவிக்கு கௌதம் கம்பீர் (கேகேஆர் அணியின் பயிற்சியாளர்), ஸ்டீபன் ஃப்ளெமிங் (சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர்), ஜஸ்டின் லாங்கர் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர்) மற்றும் ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே ( மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவர்) ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.
அனைவரும் அதிக லாபம் அளிக்கும் ஐபிஎல் தொடர் சம்பந்தமான வேலைகளில் பிசியாக உள்ளதால் அடுத்த 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை
ஆண்டுக்கு 10 மாதங்கள் அணியுடன் பயணிக்கக்கூடிய வலுவான ஒரு பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது. ஐபிஎல் வேலையில் ஈடுபடாதவர் தற்போதைய என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண் மட்டுமே.
லக்ஷ்மண் பயிற்சியாளர் பணியை ஏற்க தயக்கம் காட்டிவருவதாக தெரிகிறது. மேலும் தற்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுடன் பேசவும், அவர்கள் வேலையில் ஆர்வமாக உள்ளனரா எனச் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.


