• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

’இந்திய அணிதான் மிகவும் ஆபத்தானது’ – உலகக்கோப்பை டி20 தொடர் குறித்த முன்னாள் வீரர் கருத்து

GenevaTimes by GenevaTimes
May 28, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
’இந்திய அணிதான் மிகவும் ஆபத்தானது’ – உலகக்கோப்பை டி20 தொடர் குறித்த முன்னாள் வீரர் கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜூன் மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தான் மிகவும் ஆபத்தானது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யோன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவுள்ளது.

விளம்பரம்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவுக்கு 5 அணிகள் இடம் பெறும். அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது. விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

விளம்பரம்

கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை எதையும் வெல்லவில்லை. இந்த சூழலில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்லும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் இந்த தொடருடன் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஐசிசி கோப்பையுடன் ஓய்வை அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க – ஹர்திக் பாண்டியா – நடாஷா விவாகரத்து சர்ச்சை… க்ருணால் உடன் நேரத்தை கழிக்கும் அகஸ்தியா!

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான யோன் மார்கன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மோத உள்ள 20 அணிகளில் இந்தியா தான் ஆபத்தான அணியாக உள்ளது என்று கூறியுள்ளார், ரோஹித் சர்மா தலைமையின் கீழ் இந்திய அணியால் மற்ற எந்த அணியையும் வீழ்த்தும் முடியும் என்று மார்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோன்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் இந்திய அணியை பாராட்டியுள்ளனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

ஒரே இடத்தில் 2 ரயில்வே ஸ்டேஷன்கள்… இந்தியாவில் இந்த இடம் எங்கு இருக்கு தெரியுமா?

Next Post

ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி – News18 தமிழ்

Next Post
ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி – News18 தமிழ்

ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin