• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டது ஏன்? ஐசிசியின் புதிய விதி இதுதான்

GenevaTimes by GenevaTimes
June 13, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டது ஏன்? ஐசிசியின் புதிய விதி இதுதான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்கா அணி செய்த தவறால், இந்திய அணிக்கு 5 ரன்கள் கொடுக்கப்பட்டது, ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

நியூயார்க்கின் நாசோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில்,  டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி, 20 ஓவர்களின் முடிவில், 110 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

விளம்பரம்

18.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும், ரிஷப் பண்ட் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆனால் அரைசதமடித்து சூர்யகுமார் யாதவும், மறுமுனையில் சிவம் துபேவும் பொறுப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர்.

இதையும் படிக்க:
அமெரிக்காவை 7 விக். வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி… சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்

விளம்பரம்

இந்த போட்டியில், 15ஆவது ஓவருக்கு பிறகு, அமெரிக்கா அணி தவறு செய்ததால், இந்திய அணிக்கு 5 ரன்கள் கொடுக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐசிசியின் புதிய விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் முடிந்த பிறகு 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும். 2 முறைகளுக்கு மேல் இந்த விதியை மீறினால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி கொடுக்கப்படும்.

அமெரிக்கா அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ்க்கு 2 முறை அம்பையர்கள் எச்சரிக்கை கொடுத்தும், மூன்றாவது முறையும் அமெரிக்க அணி அதே தவறை செய்தது. இதனால் இந்திய அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது. 30 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டும் என்று பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தில், இந்திய அணிக்கு இந்த 5 ரன்கள் கிடைத்தது சற்று நிம்மதியை கொடுத்தது. அதுவரை 36 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சூர்ய குமார் யாதவ், அடுத்த 13 பந்துகளில் 29 ரன்களை எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.

ஐசிசியின் புதிய விதிகள் ஆண்கள் ஓடிஐ போட்டிகள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளிலும் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Weather Update: ‘இயல்பை விட அதிகரிக்கபோகும் வெப்பம்! மழைக்கு வாய்ப்பு உண்டா?’ வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை இதோ!

Next Post

இந்த வங்கியில் அக்கவுன்ட் இருந்தால் உங்களுக்கு பரிசு காத்திருக்கிறது

Next Post
இந்த வங்கியில் அக்கவுன்ட் இருந்தால் உங்களுக்கு பரிசு காத்திருக்கிறது

இந்த வங்கியில் அக்கவுன்ட் இருந்தால் உங்களுக்கு பரிசு காத்திருக்கிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin