Last Updated:
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பின் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியின் தோல்வியை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அறிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் ஓய்வை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதியில் இந்திய அணி உடனான போட்டிக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்மித்தும் ஒருவர். 2010 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமான அவர் இதுவரை 170 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5800 ரன்கள், 12 சதம், 35 அரைசதம் மற்றும் 28 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் காயம் காரணமாக சாம்பியன் டிராஃபி தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித் கேப்டனஷிப்பில் விளையாடியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடினாலும் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது. அரையிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து இருந்தார்.
2015 மற்றும் 2023 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம்பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
March 05, 2025 12:15 PM IST


