இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது, விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா கோபமடைந்த காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நியூயார்க்கில் உள்ள நாசா கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. விராட் கோலி விளையாடும் போட்டிகளுக்கு தவறாது வந்துவிடும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா, இந்த போட்டியையும் பார்க்க வந்திருந்தார். ஆனால், விராட்கோலி வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் விராட்கோலி சொதப்பியது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதால், விராட் கோலியை மறந்துவிட்டு, இந்தியாவின் வெற்றியை கொண்டாடத் தொடங்கினர். முன்னதாக, போட்டியின்போது, கேலரியில் அமர்ந்திருந்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, தனது அருகே அமர்ந்திருந்தவருடன் கோபமாக உரையாடிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அவர் எதற்காக கோபமடைந்தார்? என்ன சொன்னார்? என்பது தெரியாவிட்டாலும், இந்த காட்சியை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, அனுஷ்காவின் கோபம் குறித்து கமெண்ட் பதிவிடும் ரசிகர்கள், அனுஷ்கா சர்மா ஏன் இவ்வாறு கோபமடைந்தார் என்று கேட்டுள்ளனர். அத்துடன், 2வது குழந்தைக்கு பிறகு அனுஷ்காவின் நடவடிக்கைகள் மாறிவிட்டதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், கோபம் என்பது மனித இயல்புதான், இங்கு அனுஷ்காவின் கோபத்தால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்றும் ஒரு சிலர் கேட்டுள்ளனர்.
போட்டி முடிந்ததும், ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட அனுஷ்கா சர்மா, அதில் மிகப்பெரிய புன்னகையுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தை சாஹலின் மனைவி தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, போட்டியின்போது அனுஷ்கா சர்மா கோபமடைந்ததற்கு விராட் கோலியே காரணம் என சிலர் தெரிவித்து வருகின்றனர். முக்கியமான போட்டியில் வெறும் 4 ரன்களில் விராட் கோலி அவுட்டானதால், அனுஷ்கா எரிச்சல் அடைந்ததாகவும், அதன்பிறகு இந்தியா வெற்றிபெற்றதால், அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
