உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் வானிலை குறித்த தகவல்களை பார்க்கலாம்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 29 ஆம் தேதிவரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதன்முறையாக அமெரிக்கா இந்த போட்டித் தொடரை வெஸ்ட் இண்டீசுடன் இணைந்து நடத்துகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசோ சர்வதேச மைதானத்தில்தான் இந்த போட்டி நடைபெறுகிறது. இது நகருக்கு வெளியே அமைக்கப்பட்ட மைதானமாகும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 34 ஆயிரம்பேர் இந்த போட்டியை நேரில் பார்த்து ரசிக்க முடியும்.
ஆடுகளம் பெரும்பாலும் ரன் குவிப்புக்கு சாதகமாக அமையாது. இங்கு பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணிகளே திணறியுள்ளன. இங்கு 3 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்கள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் 2 முறை மட்டுமே 100 ரன்களை தாண்டி எடுக்கப்பட்டுள்ளன.
வானிலை தகவலின்படி இன்று போட்டி நடைபெறும் பகுதியில் அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 18 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. போட்டி தொடக்கத்தின்போது மழைச் சாரல் இருக்கலாம் என்றும், இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்-ல் இந்த போட்டியை கண்டு ரசிக்கலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)