இதையடுத்து டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார். இந்த தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரை வென்றதுடன் வலுவான ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தி இருக்கிறது.
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்திய அணி சூப்பர் ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கும் பிசிசிஐக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் 31 போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. இவற்றில் இந்திய அணி 18 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் பின்வருமாறு: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்பிரிக்கா உத்தேச வீரர்கள்-
ஐடன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஹென்ட்ரிக்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி
December 09, 2025 3:37 PM IST

