Last Updated:
டிவி சேனல்களை பொறுத்த அளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் இந்த போட்டி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை எந்தெந்த தளங்களில் நேரலையில் பார்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இவற்றில் டெஸ்ட் போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணி அளவில் தொடங்குகிறது. இந்த போட்டியை நேரலையில் கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டிவி சேனல்களை பொறுத்த அளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் இந்த போட்டி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதே போன்று டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டியை இலவசமாக கண்டு களிக்கலாம்.
November 30, 2025 12:35 PM IST


